*இது நம்ம குடும்பம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா நிகழ்வு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது - முன்னாள் ஆளுநர் உட்பட திரைப்பட இயக்குனர்கள் பலர் பங்கேற்பு*

Oct 19, 2026 - 19:01
 30
*இது நம்ம குடும்பம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா நிகழ்வு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது -  முன்னாள் ஆளுநர் உட்பட திரைப்பட இயக்குனர்கள் பலர் பங்கேற்பு*

இது நம்ம குடும்பம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா நிகழ்வு சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது - நிகழ்வில் முன்னாள் ஆளுநர் உட்பட திரைப்பட இயக்குனர்கள் பலர் பங்கேற்றனர்

சென்னை சாலி கிராமத்தில் உள்ள பிரபல பிரசாத் லேப்பில் CCC Film International தயாரிப்பில் சமூகத்தில் நடைபெறும் உண்மை சம்பவத்தை கதையின் கருவாக கொண்டு இயக்குனர் சைத்தன்யா சங்கரன் அவர்கள் இயக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த் பாபு அவர்கள் கதாநாயகனாக ஷாதிதா கதாநாயகியாக திரைப் பிரபலங்கள் மகாநதி சங்கர் முத்துக்காளை சிசர்மனோகர் தீபக் நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இது நம்ம குடும்பம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நிகழ்வு நடைபெற்றது

 இந்நிகழ்வில் சிறப்பு தலைமை விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அமைப்பு சாரா தொழில் பிரிவின் மாநில தலைவர் G. ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் சிறப்பு அழைப்பாளர்களாக சின்ன கவுண்டர் எஜமான் சிங்காரவேலன், சூப்பர் ஹிட் திரைப்பட இயக்குனர் ஆர். வி. உதயகுமார், திருப்பாச்சி ‌சிவகாசி திருப்பதி சூப்பர் ஹிட் திரைப்பட இயக்குனர் பேரரசு, திருடா திருடி திரைப்பட‌ இயக்குனர் சுப்பிரமணிய சிவா, திரைப்பட விநியோகஸ்தர் ஜெனிஷ், இசையமைப்பாளர் பாலசந்திரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 இந்நிகழ்வில் தேசிய மாநில விருது பெற்ற குறும்பட நடிகர் மற்றும் இயக்குநரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர்.ஏ.தாமஸ் இசையமைப்பாளர், யஷ்வந்த் இணை இயக்குநர் சசி, ஒளிப்பதிவாளர் ஜெரின் முகமது ராஜா பிரின்ஸ் மற்றும் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த பிரபலங்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0