*திருச்சியில் இந்து அமைப்பினர் மீது தொடர்ச்சியாக முஸ்லிம் அமைப்பினர் வழக்கு பதிவு செய்வதால் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்*

Jul 29, 2026 - 20:33
 21
*திருச்சியில் இந்து அமைப்பினர் மீது தொடர்ச்சியாக முஸ்லிம் அமைப்பினர் வழக்கு பதிவு  செய்வதால் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்*

திருச்சியில் இந்து அமைப்பினர் மீது தொடர்ச்சியாக முஸ்லிம் அமைப்பினர் வழக்கு பதிவு செய்வதால் - மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்

திருச்சி மாநகராட்சி 40வது வார்டு வடக்கு இந்திரா தெரு நறுங்குழல் நாயகி நகரில் பூங்காவுக்கு என ஒதுக்கபட்ட இடத்தில் பள்ளிவாசல் கட்ட முற்பட்டனர். இதை பொதுமக்களும் இந்து அமைப்பினரும் பாஜகவினரும் தடுத்து நிறுத்தினர் தடுத்து நிறுத்திய பின் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர், திருச்சி மாவட்ட காவல் துறை ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது மனு அளித்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் சர்ச்சைக்குரிய இடத்தை அளவீடு செய்ய சொன்னதன் அடிப்படையில் அரியமங்கலம் மாநகராட்சி இணை ஆணையர் திருவெறும்பூர் வட்டாட்சியர், காவல் துறையினர் முன்னிலையில் அளவீடு செய்தனர் அளவீடு செய்ததில் சர்ச்சைக்குரிய இடம் பூங்கா இடம் தான் என்று முடிவானது மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக தொழுகை செய்ய முற்படவும் இந்து அமைப்பினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதியவும் முற்படுகின்றனர். ஆகையால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் துணை தலைவர் அழகு யுவராஜ், மாநில பாஜக பட்டியல் அணி அரசு தொடர்பு இணை அமைப்பாளர் சி. இந்திரன், திருவெறும்பூர் ஒன்றிய விஷ்வ இந்து பரிஷத் பிரகண்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பது சர்ச்சைக்குரிய பூங்கா இடத்தில் அரசு இடம் என்று பெயர்பலகை வைக்கவும் இந்து அமைப்பினர் மீது முஸ்லீம் அமைப்பினர் வழக்கு பதிய முற்படுகின்றனர் வழக்கை அரசே எடுத்து நடத்த வேண்டும் (அரசு இடம் என்பதால்) என்றும் மனுவில் கூறியிருந்தனர். இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0